கடவுள்

முற்றும் கடந்தவன் தான்
கடவுளே என்பார்கள்
காலம் தான் கடக்கிறது
நாம் எங்கே கடக்கிறோம்
கடந்து வந்த பாதைதனை
உற்று நோக்குங்கால்
விளைந்தது எவ்வளவோ
அனைத்தும் நாமறிவோம்
விளையாததைப் பற்றி
வீண் விசாரம் எதற்காக
நடந்தது நடந்தபடி
நடந்து கொண்டே இருக்கும்
புரிந்தது புரிந்தபடி
புரிந்து கொண்டே இருக்கும்
பிறந்தது பிறந்தபடி
பிறந்து கொண்டே இருக்கும்
இறந்தது இறந்தபடி
இறந்து கொண்டே இருக்கும்
வாழும் காலத்தில்
எழுகின்ற கேள்வியெல்லாம்
போகும் காலத்திலும்
முழுமையாக புலப்படாதே
தேறுகின்ற எண்ணமெல்லாம்
தேனடை போல் இருந்தாலும்
பகுத்தறிவும் விஞ்ஞானமும்
கரை புரண்டு வந்தாலும்
புலப்படாத ரகசியங்கள்
ஒன்றல்ல பலகோடி
சித்தர்தனை துணைக்கழைத்தாலும்
சித்தாந்தம் விடை தராது
எல்லாம் கடந்தாலும்
கடப்பவை ஒரு சிலதே
வல்வினை பழி சொல்லி
துக்கம் அகற்றுவர்
இன்பமும் துன்பமும்
கடப்பதே கடவுள் நிலை
கடவுளே கடந்தாரா
என்பதை யார்ரறிவார்
எல்லாம் கடந்துவிடும்
என்ற நிலையுணர்ந்த பின்
நீயே கடவுளென்னும்
இருக்கையில் அமர்ந்திடுவாய்

எழுதியவர் : ரமணி (25-Oct-14, 6:59 pm)
Tanglish : kadavul
பார்வை : 71

மேலே