ஆளில்லா வேறொரு தேசம்

மகிழுந்துகளுக்கு
ஆதவனின் தாக்கத்தை
உணர முடியுமோ என்னவோ

எனக்கு புரிவதில்லை!

அதனை அடிமையாய் வைத்திருப்பவர்
குடை பிடித்து நின்ற
மரத்தின் நிழலில் நெந்து விட்டுருந்தார்....

புழுதிகள் உறவாடி
அடைக்கலம் புகுந்திருந்தன
அதன் கண்ணாடி மேற்பரப்புகளில்

நம் இருவரின் பெயரையும்
எழுதி வைத்தேன்
ஓர் புதுக்கவிதையை போல

ஆனந்தத்தில் அந்த மரம்
தன் மலர்களை தூவி விட்டது

நம் பெயரை எழுதிய இடத்தில்
அட்சதையைப் போல

நமக்கு பாதி திருமணம்
முடிந்த களிப்பில்

முகத்தை மேகத்தில் புதைத்தபடி
நடத்தேன்.....

ஆளில்லா
வேறொரு தேசம் நோக்கி

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (30-Oct-14, 9:19 am)
பார்வை : 116

மேலே