காதல் கண்கள்
தினமும் ஆயிரம்
கண்களுடன்
சம்பாஷனை
செய்தாலும்
என் கண்கள்
உன் கண்களின்
காதலை மட்டுமே
ஏற்கிறது.....!
மாபெரும்
கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்கின்றன
நீ எங்கிருக்கிறாய்
என்று.....
அருகில் நீ
இருந்த போது
என்னையே
கேட்டுக்கொண்டேன்
நான் யார்...?
என்று...!
இங்கிருந்து நீ
போன பிறகு
என் கண்கள்
என்னையே
கேட்கின்றன
நீ யார் ?
என்று.....
என் விழிகள்
இமை மூடி
தியானிக்கின்றன
ஏன் தெரியுமா?
அந்த ரகசியத்தை
உன் விழிகளிடம்
கேள் ....
அதற்கு
பதில் அங்குதான்
கிடைக்கும்.......!!!
-மறு பதிப்பு-