வேர் இழக்கும் விவசாயம்
பருவ மழை தொடங்கிருசு
புழுதி நிலம் பூத்திருக்கு
ஓட்டைக்கூரைவழி ஒழுகியது
மேகத்துளி
பூனை படுத்த அடுப்பில் கூட
புழுதி ச் சாம்பல் நனைந்திருச்சு
நனையாத இடம் என்று வெளியிலும் இல்லை வீட்டின் உள்ளயும் இல்லை
மழையில் கரைவது உன்உறுதியும்தான் ஏன் இந்த நிலைமை விவசாயிக்கு
உன் தலையில் கால்பதித்து
உலகம் உயர்ந்து போக
நீமட்டும் புதைக்கிறாய்
மூச்சுமுட்ட மண்ணுக்குள்
நகராக்க வேகத்தால்
நகராமல் போனது விவசாயம்
நம்முள் பலர் மண்வெட்டி வித்து
மடிக்கணணி வாங்கியதும்
விவசாயம் வீழ காரணம்
ஒ மனிதர்களே வானமழை
இயக்கையின் நியதியல்ல
நாளைய விவசாயம் குறித்து
வானம் வடிக்கும் கண்ணீர்
வாருங்கள் ஒன்றாய்
ஏர் பிடிப்போம் வயதான
விவசாயிக்கு தோள் கொடுப்போம்