மோதலும் காதலும்

அவள் ஆறடிக் கூந்தலை
விரித்துப் போட்டாள்
மறு நொடியே நான் சிக்கினேன்
சிலந்தி வலையில் சிக்கிய
தேனீ போல்...!!!

அவள் அள்ளி முடித்த
கொண்டை மேல்
ஆவாரம் பூ சூடையிலே..!!

பஞ்சாட்டம் என் நெஞ்சில்
ஆசைத் தீ பத்தயிலே...!!!

நான் பக்கம் போய்
நின்று கெஞ்சையிலே...!!

கொஞ்சம் அவள்
மிஞ்சையிலே...!!

என் மூஞ்சு வாடி
தொங்கையிலே..!!

களுக்கென்று அவள்
சிரிக்கையிலே...!!

இச்சு ஒன்று நான்
கொடுக்கையிலே..!!

ஓங்கி வச்சாள்
என் கன்னத்திலே..!!

நன் விழிக்கையிலே
அவள் முறைக்கையிலே..!!

பக்கம் வந்த பாப்பா
மௌனம் கலைக்கையிலே..!!

கூனிக் குறுகி நான்
நிற்கையிலே...!!

பாபபாவைக் கூட்டிய படி
அவள் செல்கையிலே..!!

பாப்பா குறும்பு
காட்டையிலே..!!

என் மனசில்
கெட்ட வார்த்தைகள்
உதிக்கையிலே..!!

சில நண்பர்கள்
என்னை அழைக்கையிலே..!!

சிந்தனையை நான்
நிறுத்தயிலே..!!

அவளைக் கை பிடிக்க
வைராக்கியம் பிறக்கையிலே..!!

நண்பர்களிடம் ஆலோசனை
கேட்கையிலே..!!

பல வழிகள் அவர்கள்
சொல்கையிலே..!!

ஒரு வழியும் பிடிக்காமல்
நான் இருக்கையிலே..!!

நண்பர்கள் தொல்லை
தாங்காமல் நான்
கோவிலுக்கு செல்கையிலே..!!

கூட்ட நெரிசலில் ஒருவன்
அவள் இடையைக்
கிள்ளையிலே...!!

அவனை நான் இரண்டு
போடையிலே..!!

அவள் சாய்ந்தாள்
மெதுவாக என்
பக்கம் என்று சில
அறிகுறி தோனையிலே..!!

இன்பத்திலே நான்
திழைத்து நிற்கிறேன்
தனிமையிலே

இ.சாந்தா

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (5-Nov-14, 12:57 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 98

மேலே