மறந்தா விட்டேன்

கேட்கும் நல்ல உள்ளங்களிடத்தில் எல்லாம் தாராளமாக சொன்னேன்
உன்னை மறந்தே போனேன் என்று !!
உயிர் தோழியும் கூட என் சினம் கண்டு நம்பித்தான் போனாள்
உன்னை வெறுத்துவிட்டேன் என்று !!
நாட்கள் நகர்ந்து ஆண்டுகள் உருண்டோடியும்
உன் முகமோ நான் நடந்து செல்லும் போது
ஏனோ அவசரமாய் என்னையே கடக்கும் என் நிழலாய்!!
உன் பேச்சோ வெற்று இதய சுவற்றில் மோதியப்படி !!
உன் காதலோ குருதியோடு கலந்து என் அனுமதி இல்லாது என்னுள் பரவியப்படி!!
உன் நினைவின் இழைகள் ஒவ்வொன்றும்
என் ஆழ் மனத்தில் சிலந்தி வலையின் பின்னல்களாய் !!
விழித்திருந்த போது
உச்சந்தலையில் புத்தி உரக்க கத்தியது
மறந்தா விட்டேன் ??
உன்னை!!
என்று...
பிறர் பேசுவதை கேட்டும் கேட்காமலும்
இருதயத்தில் உள்ளதை சொல்லியும் சொல்லாமலும்
அகத்தின் கடும் வேதனை முகத்தில் காட்டியும் காட்டாமலும்
சிரித்து நடித்து, இயல்பாய் நடமாடி
நான் மீண்டு வந்து விட்டேன் என்று
இல்லம், ஊர் , உலகம் நம்ப செய்த
களைப்பில் உறங்கிப்போனது உடல் மட்டும்
நீர் பருக நாடு சாமம் எழுந்த போது
உறங்காத இந்த பாவி இதயம் மெதுவாய் கேட்டழுதது
மறந்தா விட்டேன் ??
உன்னை!!
என்று...