வெட்கம் இல்லையோ
என்னவனே ....
என் இதயத்தில் குடி ...
கொண்டிருப்பவனே ...
நினைவுகளால் .....
விளையாடுபவனே ....!!!
தங்கள் ...
இதயத்தில் எனக்கு ...
இடம் கொடுக்காமல் ...
இருக்க உங்களுக்கு ...
வெட்கம் இல்லையோ ...?
இது என்ன நியாயம் ...?
திருக்குறள் : 1125
+
நினைந்தவர்புலம்பல்.
+
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 125