மீண்டும் ஓர் கவிதை என் கன்னத்தில் 555
என்னவளே...
கண்ணதாசனின் கவிதைகளை
வாசித்துவிட்டு...
என்னையும் கவிதை
எழுத சொன்னாய்...
கவிதைகளை நான்
வாசித்ததும் இல்லை...
எழுதவும்தெரியாது என்றேன்...
வினாடி கூட
யோசிக்காமல்...
என் கன்னத்தில் வைத்தாய்
ஓர் முத்தம்...
உன் மடி தவழும்
பிள்ளையடி நான்...
இப்போதும் சொல்கிறேன்
எனக்கு கவிதை எழுத தெரியாது...
உன் இதழ்கள் என் கன்னத்தில்
எழுதியதைவிடவா...
நான்
எழுதவிட போகிறேன்...
நீ எழுத வேண்டுமடி...
மீண்டும் ஓர் கவிதை
என் கன்னத்தில்.....