வகுப்பறை

மழலையில் விசித்திரம்!
பழக பழக விளையாட்டுக் கூடம்!
விவரம் புரிந்ததும் சிறையாய் தோன்றலாம்!
பருவம் வந்ததும் இன்பமாய் இனிக்கலாம்!
நண்பர்கள் கூட்டணியில் சொர்கமாய் இருக்கலாம்!
செல்ல சீண்டல்களும், சிறு சிறு சண்டைகளும்,
காலத்தோடு கரைந்து செல்ல,
கல்வி பாடம் பயில வந்து, நட்பு பாடம் பயின்று வர,
உள்ளம் அறிந்து, உலகம் தெரிந்து,
அறிவினை வளர்க்கும் தருவாயில்
விளிம்பில் நிற்கும் கல்வி வாழ்க்கை!!
விழிகளிலும் நதியாக!!!

எழுதியவர் : மு. பாலவேலாயுதம் (15-Nov-14, 2:36 pm)
Tanglish : vagupparai
பார்வை : 55

மேலே