நட்பின் சான்று
தேடாமல் வருவது
தேடினாலும் கிடைக்காது
உயிரோடு கலப்பது
உள்ளதால் நெகிழ்வது
வார்த்தையால் சொல்லாது
வடிவத்தால் சொல்லாது
இலை போல உதிராது
பூ போல வாடாது
பொன்னாலும் செய்யவில்லை
பொருளாலும் செய்யவில்லை
தேயும் நிலா அல்ல
தேயாத சூரியனாய்
வற்றாத நதியாய்
வரும் மழையாய்
முகசிரிப்பு அல்லாது
அகசிரிப்பாய்
போட்டி பொறாமை
பொல்லாத செயல் இல்லை
உருகாத வடிவில்
உள்மனதில் வசிக்கும்
மூன்று எழுத்து வார்த்தை
முத்தமிழை வெல்லும்
வைத்துப்பார் உள் மனதில்
வெல்வாயே இனி வாழ்வில் ...!
இதுவே நட்பின் சான்று .....