ஜடம்

ஜடம்


கலவியின் போழ்தில் கண்ணாடி வளையலோசை

தொட்டிலில் சிணுங்கிடும் மழலையின் கீதம்

திண்ணையில் படுத்திருக்கும் கிழங்களின் இருமல், செருமல்

கோயில் கொடையின் நையாண்டி மேளச்சத்தம்

தெருமுனையில் ஊளையிடும் நாயின் ஓலம்

இழவுவீட்டின் பறைஒலி

ராப்பிட்சையின் உடுக்கையுடன் கூடிய ஆரோஹணம், அவரோஹனம்

அர்த்தஜாமத்தில் குருட்டுச்சேவலின் காமக்கூவல்

மழைக்காலத் தவளைகளின் தனி ஆவர்த்தனம்

இருட்டுவானில் திரியும் ஒற்றைக் காகத்தின் கரைதல்

ஆகாயத்திலிருந்து பூமியில் வந்திறங்கும் பேரிடி ---என

இவற்றில்,

ஏதாவது ஒன்றினைக் கேட்டபின்னும்

பாதிதூக்கம் பாதிக்கப்பட வில்லையென்று

எவன் சொல்கிறானோ, அவனே ஜடம்.

.

வல்லநாடன் . இல. கணேசன்
.
செல்பேசி 9443533306

எழுதியவர் : (20-Nov-14, 1:19 pm)
பார்வை : 77

மேலே