ஓவியன்
எப்பொருள் பார்க்கினும்
அப்பொருள் படைத்திடும்
ஓவியன் கொள்வான் கலை நயம்
கலைநயம் கண்டவன்
ஒப்பற்ற ஓவியம் உண்மையின்
தத்துவம் உணர்த்திடும்
பார்ப்பவர் வியந்திட பட்டு மேனி
கயல் விழிகள் கருங் கூந்தல்
சிவந்த உதடுகள் அங்கங்கே பெண்மையின்
அங்கங்கள் கவர்ந்திழுக்கும் அழகுத் தோற்றம்
வண்ண வண்ண உடையில் வாளிப்புடன்
படைத்திட கொண்டான் ஞானம்
எப்படி இப்படி இத்துணை கலைநயம்
ஓவியன் மட்டில் இவ்வகை ஞானம்
கடவுள் கொடுத்த கலை நிறைந்த ஞானம்
அபாரம் அபாரம் கடவுளின் அளப்பரிய கொடை
உயிர் ஊட்டம் மிக்க அற்புதப் படைப்பு
படைத்திட அவனால் மட்டுமே முடியும்
ஓவியம் படைத்திட ஞானம் வேண்டும்
கடவுளின் அழகையும் காண்பவர் வியந்திட
பக்தியில் திளைத்திட உண்மையின் தத்ரூபம்
விளங்கிடும் வண்ணமாய் விந்தையாய் வரைந்திடும்
வித்தையை கொண்டவன் ஓவியன்
உலகிலே சிறந்த கலைஞன் ஓவியனே