என்னிடம் பேசாமல் இருந்து

தெருவைக் கூட்டும் துடைப்பத்தால்
எனக்கு நீ வெண்சாமரம்
வீசினாலும் சரி....

வீடு கட்டப் பயன்படும்
கட்டையால் அடித்தாலும் பரவாயில்லை....

பாதத்தில் அணியும்
காலணியால் என்னை
அடித்தாலும் சரி....

தெருவில் தூக்கி
என்னை நீ வீசினாலும் சரி.....

ஐந்தறிவு ஜீவன் வெளியே
தள்ளும் கழிவை எடுத்து
நீ என்னை குளிப்பாட்டினாலும் சரி........

நீ என்னை எத்தனை எத்தனை
அவமானப்படுத்தினாலும் சரி....

தாங்கிக் கொள்கிறேன்
பொறுத்துக் கொள்கிறேன்
ஏற்றுக் கொள்கிறன்

ஆனால் என்னிடம் பேசாமல் இருந்து மட்டும்
என்னை அவமானப்படுத்தாதே.........

பத்து மாதம் என்னை
உன் கருவறையில் அடை காத்த நீ
நான் செய்யும் தவறுக்காக
என்னிடம் பேசாமல் இருந்தால்
எங்கு நான் செல்வது அம்மா ??

இறைவனிடம் செல்வதை தவிர......

எழுதியவர் : சாந்தி ராஜி (1-Dec-14, 10:22 pm)
பார்வை : 210

மேலே