வருந்தாத உள்ளங்களால்
அரும்பாத மொட்டுக்களால்
மணம் பரவுவதில்லை
பொழியாத கார்மேகத்தால்
பயிர்கள் செழிப்பதில்லை
தொடராத பயணங்களால்
புதுஅனுபவங்கள் கிடைப்பதில்லை
மீட்டாத வீணையால்
நாதங்கள் பிறப்பதில்லை
இணையாத உள்ளங்களால்
இல்வாழ்வு சிறப்பதில்லை
தொடராத உறவுகளால்
குடும்பங்கள் வளர்வதில்லை
தேடாத செல்வங்களால்
வாழ்வு உயர்வதில்லை
வருந்தாத உள்ளங்களால்
உறவு தளைப்பதில்லை
முடியாத கவலைகளால்
குழப்பங்கள் தீர்வதில்லை
தொடுக்காத கேள்வியால்
ஐயம் தெளிவதில்லை
மன்னிக்காத உள்ளங்களால்
அமைதி அடைவதில்லை
எடுக்காத முயற்சியால்
வாழ்வுஎன்றும் மேன்மைஅடைவதில்லை