நண்பா, தயவு செய்து கண்ணீர் விட்டு விடாதே
நண்பா,
வாழ்த்துச்சொல்லி
வரவேற்க
நீ வேண்டாம்...!
நான் வாடியிருந்தால்
வந்தெனக்கு
சொல் ஆறுதல்...!!
கைதட்டி
சிரித்து மகிழ
நீ வேண்டாம்...!
நான் தடுக்கிவிழுந்தால்
கைதூக்கி
என்னை தட்டிக்கொடு...!!
வாரிக்கொடுத்து
வசதி பெருக்க
நீ வேண்டாம்...!
நான் வறுமையில் இருந்தால்
வாழ்வில்
முன்னேறும் வழி சொல்...!!
என்றுமே கைகோர்த்து
நடந்திட
நீ வேண்டாம்...!
நான் துக்கத்திலிருந்தால்
துவண்டு விடாமல்
இருக்க தோள் கொடு...!!
கஷ்டத்திற்கு மட்டுமா நான்?
என் கஷ்டத்தில்
துணை நிற்கும் நீ,
நிச்சயம்
என் சந்தோஷத்தில்
இருப்பாய்...!!!
ஆனால்,
உனை மறந்து
போகும் பயணம்
மட்டும்...நீ வேண்டாம்...!!!
நண்பா,
அந்நேரம்
தயவு செய்து
கண்ணீர் விட்டு விடாதே...
உன் கண்ணீர்
துடைக்க முடியாது
என் கைகள்
கட்டப்பட்டிருக்கும்...!!!!