சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 17 படலிக தீர பவ்வளிஞ்சவே – ராகம் ரீதிகௌள

பல்லவி:

ப ட லிக தீ ர பவ்வளிஞ்சவே (ப)

அனுபல்லவி:

ஸட லநி து ரிதமுலநு தெக கோ ஸி
ஸார்வபௌ ம ஸாகேத ராம (ப)

சரணம்:
பங்கஜாஸநுநி பரிதாபமு க நி
பங்கஜாப்தகுல பதிவை வெலஸி
பங்கஜாட்சதோ வநமுந கேகி
ஜிங்கநு வதி யிஞ்சி
மங்கு ராவணுநி மத மு நணசி நிச்-
சங்குடௌ விபீ ஷணுநிகி ப ங்கா ரு
லங்க நொஸகி ஸுரல ப் ரோசிந நிஷ்க-
ளங்க த்யாக ராஜநுத ராம (ப)

பொருளுரை:

உன் களைப்பு தீரப் பள்ளி கொள்வாயாக!

ஸார்வபௌம! ஸாகேதராம! தீராத என் பாவங்களை அறவே ஒழித்து ராமா உன் களைப்பு தீரப் பள்ளி கொள்வாயாக!

பிரமனுடைய பரிதாபத்தைக் கண்டு (மனமிரங்கி), சூரிய குலத்தின் நாயகனாக அவதரித்து, சீதையுடன் காட்டிற்குச் சென்று, மாய மானைக் கொன்று, மூர்க்கனாகிய இராவனின் மதத்தையடக்கி,ஐயமில்லாத விபீஷணனுக்குப் பொன் மயமான இலங்காபுரியை அளித்து, தேவர்களைக் காத்த (சோர்வு தீர) பள்ளி கொள்வாய், களங்கமற்ற த்யாகராஜன் வணங்கும் இராமனே!

குறிப்பு:

அபூர்வ தியாகராஜ கீர்த்தனை. ரீதிகௌள ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை குரலிசைக் கலைஞர் T.M.கிருஷ்ணா பாடுகிறார். TM Krishna - Ragam: Reethigowla - Krithi: Badalika Dheera என்று பதிவு செய்து யு ட்யூபில் கேட்கலாம்.

எழுதியவர் : டி.எஸ்.பார்த்த ஸாரதி (9-Dec-14, 9:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

புதிய படைப்புகள்

மேலே