தாயின் கருவறை - சகி

@@தாயின் கருவறை @@
நிம்மதியான உறக்கம்
அன்னையவள் கருவறையில்...
தூய்மையான சுவாசம்
அன்னையவள் அன்பு....
பத்துமாதங்களும்
தாயே கதிரவனாய்
முழுமதி நிலவாய் ....
நம்மை மட்டுமே
எதிர்பார்த்து சுகமான
சுமையாக சுமப்பவள் ....
மாதம் ஒவ்வொன்றும்
மனதில் ஆயிரம் ஆயிரம்
எண்ணங்களுடன் இரத்த உலகத்தில்
சுமக்கிறாள் ...
கணவன் அரவணைப்புடன்
தன் தாயின் அக்கறையுடன்
தந்தையின் அன்புடன்
தனக்கே சொந்தமான உயிரை
உயிராக சுமக்கிறாள் ....
சிசுவின் அசைவுகளை
ஆழமாக உணர்ந்து மகிழ்ச்சின்
எல்லைக்கே செல்கிறாள் ...
உதைக்கும் தருணங்களில்
உணர்கிறாள் தன் தாய்மையை ....
அறுசுவை உணவையும் உண்டு
உள்ளம் மகிழ்கிறாள் ...
உண்ணும் உணவும்
உறங்கும் பொழுதும்
தன் பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்த
சிசுவுக்கே உரித்தாக்கிறாள் ...
மறுபிறவியை எடுக்கிறாள்
தன் பிரசவம் ஒவ்வொன்றிலும்
பெண்ணவள் ....