வாழ்க பாரதி

நீ காலூன்றி வாழ்ந்த
நாட்களை விட,
கவியூன்றி வாழ்ந்த,
வாழும், வாழ போகும்
நாட்களே அதிகம்.

சுட்டும் விழி சுடரில்
உன் சக்தி மிகுந்த பார்வையில்,

அச்சமில்லை அச்சமில்லை
உன் அச்சமில்லா மீசையில்,

இச்சகத்தில் உள்ளோரெலாம்
சாதி கொண்ட வேளையில்
சாதிகள் இல்லையடி பாப்பா என்னும்
சாட்டையடி வரிகளில்

கவிதையும் உன்மேல்
காதல் கொள்ளும்
காலங்கள் தாண்டியும்
உன் பெருமை வெல்லும்

வாழ்க பாரதி..

எழுதியவர் : பிரபாகரன் (12-Dec-14, 11:26 pm)
சேர்த்தது : பிரபாகரன்
Tanglish : vazhga baarathi
பார்வை : 166

மேலே