முள்வேலி பூக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
இனவேறி-1
...........................................................................................
பெயர் என்னவென்று கேட்ட
சிங்கவனுக்கு
மரியாதைராமன்
என்றான் தமிழன்
அவனை
தூப்பாக்கி முனையில் நிறுத்தி சிங்களவன்
அவன் மொழியில்
பல முறை சொல்ல சொல்லி கேட்டான்
தெவடியா மொவனென்று
நூரு வாட்டி
............................................................................................................................................
இரக்கம்
............................................................................
முள்வேலியில் சாய்த்தியிருந்த
தூப்பாக்கியில்மூத்திரமிட்டான்
ஒரு சிறுவன்
அதை இரானுவம்
கண்டால்
அவனை கொன்றுவிடும்மென்று
அவசர அவசரமாய்
சிறு நீரை காயவைத்தது
தூப்பாக்கி
...................................................................................................................................
கொடுமை
..........................................................................................
தமிழன் மண்டையோட்டில்
தேங்ககிய மழை தண்ணீரில்
காகிதக்கப்பல் வீட்டு விளையாட்டான்
ஒரு சிங்களவன்
கூடயிருந்த
இன்னொரு சிங்களவன்
சிரித்தான்
அது
என் மூத்திரமென்று
...............................................................................................................................
பயத்திளிருந்து.....
.........................................................................................................
குண்டு போடும் போதெல்லாம்
அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு
சாமி
சாமி யென சொல்லும்
சிறுமி
சிங்கள தூப்பாக்கி
அப்பாவை சுட
இறுகிபோய் நின்றாள்.....
......................................................................................................................
நிராசை
.....................................................................................
பொட்டு டப்பாவை
எந்த
முட்டையில் வைத்தோமென்று
தேடி எடுப்பதற்க்குள்
குண்டு வெடிக்கலாம் என்ற
பயத்தில்
முள்வேலி கம்பியில் தெரியும்
தன் பிம்பத்தை பார்த்து
எச்சித்தொட்டு
பொட்டுவைத்து
தனக்கு பொட்டுவைத்தால் எப்படியிருக்குமென
அழகுப்பார்த்தால் முள்வேலியில் வாழும் சிறுமி
.................................................................................................................................................................................
கனிப்பு
.......................................................................................................................................
கழுகு ஒன்று
வந்து முள்வேலியில் வந்து
அமர்ந்தது
ஒருகூட்டம் பேசிக்கொண்டேயிருக்க
ஒருகூட்டம் தூங்கியது
தூங்கி கூட்டம் எழுந்து
பேசிக்கொண்டேயிருக்க
பேசிக்கொண்டேயிருந்த
கூட்டம் தூங்க ஆரம்பித்தது
நம்மைவிட இங்கு
பெரிய பிணம்தின்னி இருப்பதாய்
நினைத்து பறந்தது
கழுகு
.................................................................................................................................................................
கொலைகார தேசம்
.............................................................................................................................................
இடமாற்றமென்று
இரானுவம் சொல்ல
பயணப்படும்
தமிழனில்
விழுந்து எழும் யாரவது ஒருவர்
நிச்சயம் சொல்கிறர்கள்
தாம்
எலும்பு தடிக்கி விழுந்ததாக
............................................................................................................................................................
கணவன் மனைவி
..............................................................................................................
பரம்பரை பரம்பரையாய்
வளர்த்துவந்த
மாட்டை
வெடிக்குண்டுக்கு
பரிகொடுத்தோமே
இனி அந்த பரம்பரை மாடு கிடைக்குமா யென்று
அழுதாள் மனைவி
இந்ததேசத்தில்
இனி நம் பரம்பரையிருக்குமா யென்று
ஏங்கினான் கணவன்
இவர்கள்
இரண்டு பேரும்
இருக்கிறார்களா
இல்லையா யென தெரியாமல்
போர்களத்தில் போராடி கொண்டியிருந்தான் மகன்
.....................................................................................................................................................
சந்தேகம்
...........................................................................
சுண்ணாம்பு கேட்ட ஆயாவிற்க்கு
சுண்ணாம்பு
கொடுத்த ஆயா
விரலிருந்த சுண்ணாம்பில்
இரத்தம்
இரத்தம்தான் யாருடையது என்று
தெரியாவில்லை
சுண்ணாம்பு கொடுத்த ஆயாவிற்க்கு
.................................................................................................................................
சாட்சி
.........................................................................................................................
சுடசுட ஒடிய சிலர்
சுடசுட செத்தார்கள்
சுட்ட துப்பாக்கி மட்டும்
சுட்டுக்கொண்டேயிருந்தது
தமிழர்களின்
மண்பானை
மாடு
ஆடு
மரம்
பழைய துணி
பொம்மையென்று
இந்தியா சொல்கிறது
இதை போர்யென்று
........................................................................................
சாட்சி
........................................................................................
குருடான நாய்
நுகர்ந்து தெரிந்துக்கொண்டது
அது
தன்னை வளர்ந்தவன்
பிணமென்று
தெரிந்துக்கொண்ட நாய்
பிணமானது
அதை
எந்த நாயும்
கண்டுப்பிடிக்க முடியவில்லை
....................................................................................................................................................
நம்பிக்கை
...............................................................................................................
முள்வேலியில்
வளரும் செடியொன்றுக்கு
அம்மா பெயர் வைந்தாள்
அப்பா யென்று
செடிக்கு நீர்யுற்றி
வளர்க்கிறாள் மகள்
மரம் தன் அப்பாவை போலவே
தங்கள் சுகந்திரத்திற்க்கு
போராடுமேன்று
............................................................................................................................
முடக்கம்
..............................................................................
காகிதத்தில்
கத்திக்கப்பல் செய்ய
அதன்மேல்
புட்ஸ் காலைவைத்தான்
சிங்களவன்
அதும் ஆயுமென்று..................
......................................................................................................................
.........................................................................................................
தன்னை எடைக்கு
போட்டால்
வீடேக்கட்டளாமென்று
ஒரு தமிழனை
அழைந்து
சொல்லியது
வெடிக்குண்டு
அதை
காலால் எத்திதள்ளிய
தமிழனுக்கு தெரியும்
அதன்மேல் தடவப்பட்ட இனவெறி
......................................................................................................................................
அம்மா
.................................................................................................................
பரட்டைமுடி தெரியாமலிருக்க
அம்மா
தன்
பிள்ளையின்
தலையில் துணியைப்போட்டாள்
இது
தீட்டு துணி இல்லயில்லமா என்றால் மகள்
அந்த துனியில் ரத்தமும் சதையும்
தன் மகளிடம்
என்ன சொல்லுவதென்று முழித்தாள்
அம்மா
..........................................................................................................................
மரப்பாச்சி மாமா
....................................................................................................................
அவரை
மரப்பாச்சி மாமாயென்று
அழைக்கும்
சிறுவனுக்கு தெரியும்
அவன்
கை வெட்டப்பட்ட இடம்
......................................................................................................................
ஆள்காட்டி விரல்
......................................
சிங்களவன் விசாரிக்க அவனிடம்
சுட்டு விரல்
துடங்கி
மோதிரவிரல், பெருவிரலென
ஒவ்வொரு விரலையும்
சொல்லிய
தமிழன்
ஆள்காட்டி விரலை
ஆள்காட்டிவிரல் என்று சொல்லாமல்
பல்விளக்கும் விரல்
கட்டவிரல்
முடித்தான்
.............................................................................................................................
நிலை
....................................................
முள்வேலியில்
தங்கதிருகானி
கிழே கிடக்க
தோடு எங்கென்று
உதைவாங்க முடியாதேன
தங்கதிருகாணியை
துக்கியெறிந்தாள்
அதை
கண்டுபிடிச்ச தமிழச்சி
................................................................................................................................
............................................................
.விட்டில் புதைத்த
ஊண்டியலை ஞாபகமாய் எடுத்து
முள்வெலிக்கு புறப்பட்ட
சிறுவன்
அம்மாவிடம் சொன்னான்
அம்மாஊண்டிய தோண்டிய யிடத்தை
மூடாமல் வந்துவிட்டேன் என்று
அம்மா
அழுதப்படி
சொன்னால்
இந்நேரம் நம் வீட்டையே குண்டு மூடியிருக்குமே என்று
.................................................................................................................................................................
அதோ நிலாயென்று காட்டி
சோறுட்டும்
அம்மா
இப்போது
அதோ அங்க நம் வீடென்று
சோர் ஊட்டுக்கிறாள்
அந்னேரம்
அம்மா கண்ணீல்
வரும்
கண்ணீர்துளி
எதற்க்கென்று
தெரியலாம் பிள்ளைக்கு
..................................................................................................................
ஒரு மரத்தைப்பார்த்து
இன்னொருமரம்
சொன்னது
நீ சதைப் பிடித்திருக்கிறாய்யென்று
அதற்க்கு
அடுத்த மரம் சொன்னது
எல்லாம் இராசபட்சே விருந்தென்று
விருந்து
உன்னமரம்..மற்றமரம் முன்
மரமாய் பிறந்ததே தப்பேன்று
அழுதது
.............................................................................................................................
போர்களத்தில்
அட்டை
பணமரத்தை பார்த்து எச்சரித்தது
இவ்வளவு இரத்தம் குடிக்ககூடாதென்று
அதற்க்கு
பணமரம் சொல்லியது
நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன்
ஆனால் சிங்கள்வர்கள்தான் என்னை
குளுப்பாட்டிக்கொண்டியிருக்கிறார்கள் என்று
............................................................................................................................................
ஆயாதலையில்
பீரங்கி சுவடு
ஆனால்
ஆயாதான்
யார் ஆயாயென்று
தெரியவில்லை
.............................................................................................................
எழுந்தவனுக்கு
உட்கார அனுமதியில்லை
உட்கார்ந்தவனுக்கு
எழுந்திருக்க யோசித்தான்
சிங்கள் இரணும்
சாக்லெட்டு
கொடுத்து கொண்டாடிக்கொண்டார்கள்
வெற்றிப்பெற்றாதாக்
...........................................................................................................
முள்வேலியில்
இறக்குமதி செய்யப்படுகிறது
கொஞ்சம் அனுதாபம்
நிறைய வன்கொடுமை என்று
எழுதிய பேனா
மீண்டும் எழுதுகிறது
இந்த வார்தையை
மாறுதல் மட்டுமில்லை
............................................................................................................
வேதனை
.........................................................................................................
நாட்டின்
எல்லைக்கோடுக் கேட்டாள்
முள்வேலி
ஆரம்பத்தை
காட்டுகிறார்கள்
சிறுவர்கள்
..............................................................................................................................
எலி
முள்வேலி வந்தது
எலியின் காதில்
எதையோ சொன்னார்கள்
முள்வேலிக்கூட்டத்தினர்
அதை சொல்ல
தகுதியான
ஆள் தேடியே
இறந்தது எலி
..................................................................................................................