நீ நான்
நீ என்ன எனக்கு?
நானும் நீ "நான்"ற்கு மேல்
நானும் நீயும் பூமிக்கு மேல், சாமிக்கு மேல்
நீ சிரிக்கும் போது, உன் இன்பம் நான்
நீ அழுகும் போது, சிரிப்பூட்டும் கிச்சு கிச்சு நான்
நீ சரியும் போது, நீ விழுகும் புல்மெத்தை நான்
என் பிள்ளை ஈன்று எடுக்க அழுதக் குழந்தை நீ
அதைப் பார்த்து அழுத எனக்கு சமாதானம் சொன்ன இரட்டை குழந்தையின் தாய் நீ
வளர்ந்த குழந்தையைக் கண்டு கொள்ளாது, பிறந்தக் குழந்தையும் மட்டும் அதிகம் கொஞ்சும் பாசக்காரி, மோசக்காரி.
தள்ளாடும் வயதில், கைத் தடி தேவை இல்லை, உன் கைப் பிடி போதும்! இருவரும் சேர்ந்து ஆடுவோம்.
நீ மறிக்கும் போது, படுத்து உறங்கும் கல்லறை நான்
நான் என்னடி உனக்கு?