நல்ல எண்ணங்களே வருக
நல்ல எண்ணங்களே வருக!
என்னை ஆக்கும், அழிக்கும் எண்ணங்களே
எங்கிருந்து பிறக்கிறீர்கள் சொல்லுங்களேன் !
என் மனத்திலா, உள்ளத்திலா?
எப்படிப் பிறக்கிறீர்கள் சொல்லுங்களேன் !
அறிவா, ஆற்றலா, அனுபவங்களா, பயிற்சியா
உள்ளத்தின் வளர்ச்சியா, உலகின் இயற்கையா
இறைவனின் அருளா? இதயத்தின் உயர்வா?
யார் உங்கள் பெற்றோர்கள், வளர்ப்பாளர்கள்?
நல்ல எண்ணங்களால்
நாடு வளம் பெறும்
நம் வாழ்வு வளம் பெறும்
நம் சமுதாயம் வளம் பெறும்
நம் இல்லம் வளம் பெறும்
நம் உள்ளம் வலுப்பெறும்!
ஏனிந்த நல்ல எண்ணங்கள் வளர்வதில்லை?
எப்படித் தீய எண்ணங்கள் பிறந்து வளர்கின்றன?
உலகைச் சாக அடிக்கின்றன!
சமுதாயத்தைப் பாழடிக்கின்றன.
தனி மனிதனைத் தடுமாறச் செய்கின்றன.
சமுதாயத்தைச் சிதற அடிக்கின்றன.
யார் தவற்றினால் இந்தக் கேவலமான நிலை?
தனி மனிதனா? பெற்றோர்களா?
ஆசிரியர்களா? ஆன்மீகத் தலைவர்களா?
அரசியல்வாதிகளா? உற்றவர்களா, உறவினர்களா?
எல்லோருக்கும் பொறுப்புண்டு, அனைவருக்கும் பங்குண்டு.
நல்ல எண்ணங்களே!
நீங்களாகத்தான் வர வேண்டும்
எங்களைக் காக்க வேண்டும்
மக்களை வாழ வைக்க வேண்டும்
உலகை உருமாறச் செய்ய வேண்டும் !