என் தாய்த் தமிழுக்காக 0067

நீ பிறந்த மண்ணில்
நான் பிறந்தேன் -ஆதலால்
உன் மீது காதல் கொண்டேன் !!
எம்மை அழிக்க நன் நூலை எரித்தான்
அனைத்தையும் காக்க ஒருவன் அவதரித்தான் !!
நீ அழியாது வாழ நானழிந்து போவேன்
உனைப்புகழ்ந்து இன்னுலகில் எடுத்துரைத்துப்போவேன் !!
எல்லாமே நீயென சொல்வேன்
நீயின்றி நானில்லையென வாழ்வேன் !!
உனை அழிக்க வருவோரின்
பெரும் போர் புரிவேன்
மார்வைப்பிளக்கும் கூரிய வேலேந்தி
மகிழ்வுடன் சாய்வேன்
ஆனந்தக்கண்ணீரினால்
தமிழன்னையை நனைப்பேன் !!
பரிந்துரைக்க யார் வாராது போனாலும்
புரிந்துரைப்பாய் பூலோக வாழ்வை விட்டு
பரலோகம் ஏவியது உன்னாலேயென்று !!
பல்லாயிரம் பாவலர்களின்
நான் ஒரு சொல்லாயிருப்பேன் !!
என் தாய்த் தமிழுக்காக !!
என் தாய்த் தமிழுக்காக !!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (24-Dec-14, 9:17 pm)
பார்வை : 133

மேலே