அஃறிணையில் உயர்திணை

அன்பின் ஆழத்தில் அகப்படவைப்பேன்
ஆர்ப்பரிக்கும் ஆனந்தத்தை அடையவைப்பேன்
அறிவியலில் ஆராய்ந்து அறியாத
அஞ்ஞாதவாசம் அளாவி அறிந்துணரவைப்பேன்.....

இன்றியமையாத இன்பத்தை இயன்றவரை
இறுமார்ப்பின்றி இல்லறத்தில் இட்டு இடுவேன்
இயந்திரத்தனமான இயக்கத்தின் இருக்கத்தை
இடையின் இருட்டுக்குள் இருத்திக்களைவேன்...

ஈர்ப்பில் ஈடுபட்டு
ஈர்த்து ஈரப்பதத்தில்
ஈதளிப்பேன் ஈந்துன்னை

உன் உள்ளமது உள்ளபடியே
உவகையுடன் உவர்ந்தேற்பேன்
உவமையாய் உன்னிடம் உன்போன்று
உயிர் உருவாக்கிட உயிர்கசிவேன்

என்னுள் எனை எடுத்து
என்னுயிரை என்னிரண்டாக்கிட
ஏவுவேன் ஏக்கத்துடன்
ஏவாளாய்!

ஐயமின்றி ஐம்புலனில் ஐக்கியமாகி
ஐய்யகோ ஐ'ய்யின் ஐவிரல்சேர்
ஐ'யென ஐங்கரனே....

ஓருயிர் ஒடிங்கி ஓராயிரமாய்
ஒளிர்ந்து ஒத்திசைவாகட்டும்
ஒப்பற்ற ஒருதுகளாய்....

எழுதியவர்
சூரியா

எழுதியவர் : சூரியா (25-Dec-14, 12:25 pm)
பார்வை : 78

மேலே