புத்தாண்டே 2015 வருக

புத்தாண்டே வருக !
`````````````````````````````
மனதில் இன்பம் பொங்கிடும்
ஜனவரியே வருக !
காதல் மழை பொழிந்திடும்
பிப்ரவரியே வருக !
பெண் பெருமை போற்றிடும்
மார்ச்சே வருக !
முட்டாள் ஆக்கி மகிழ்ந்திடும்
ஏப்ரலே வருக !
பள்ளி நாட்கள் துவங்கிடும்
ஜுனே வருக !
நோன்பின் நோக்கம் புரிந்திடும்
ஜூலையே வருக !
சுதந்திர சேதி சொல்லிடும்
ஆகஸ்டே வருக !
ஆசான் மேன்மை விளக்கிடும்
செப்டம்பரே வருக !
வெடிச்சத்தம் காது பிளந்திடும்
அக்டோபரே வருக !
மழலை மொழி பேசிடும்
நவம்பரே வருக !
ஏசு கானம் கேட்டிடும்
திசம்பரே வருக !
புத்தாண்டே நிறைவாய் வருக !
நிறைவே தருக !

எழுதியவர் : திருக்குழந்தை (27-Dec-14, 4:19 pm)
பார்வை : 161

மேலே