விற்பனை எழுத்துகள் - இராஜ்குமார்

விற்பனை எழுத்துகள்
~~~~~~~~~~~~~~~~~~

சுவரொட்டியின் தேகமே
பக்குவமாய் பதிகிறது
அரசுப் பள்ளிகளின்
அத்துனை சுவரிலும் ...

ஒழுக்கம் உருவாக்கி
வாழ்வியலை கருவாக்கிய
வகுப்பறை தரைகளில்
வருத்தம் மடிகிறது ....

தனியாரின் தவணைக்கு
அனைத்தும் அளிக்கும்
அற்ப குணத்தில் அடிமட்ட
அறிவிலியாகிறாய் ....

பெருமையின் போர்வைக்குள்
தேகத்தைப் பதுக்கவா
வருட வருமானத்தை
வாரி இறைக்கிறாய் ...???

அழுத்தம் நுழைக்கும்
அற்புத பள்ளியிலா
திறமையின் ஊற்றுகள்
தினமும் சுரக்கிறது .... ???

சிந்திக்கும் மூளையை
சிறக்கடிக்கும் மனதை
சிறையில் அமர்த்தும்
சிறுமையின் சின்னமா நீ ...?

இழிவுப் பேசும்
இதழ்களே என்றேனும்
பொழிவின் புகழிடத்தை
இமைவிரித்து உணர்ந்தீரா ...??

வியாபாரமற்ற கல்விக்கு
வித்திடும் விதைகளையே
விற்பனைக்கு விற்கும்
விழிகளைப் பிடுங்கி
வீதியில் வீசினாலும் ...

விழிப்புணர்வின் விரலோடு
ஒற்றை இலக்க புரிதலே
ஒதுங்கி நிற்கிறது ...

- இராஜ்குமார்..

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (27-Dec-14, 6:50 pm)
பார்வை : 367

மேலே