விடியலை நோக்கி
மகப்பேறு மருத்துவமனையில் ஒரு ஜனனம் ---
அந்த விடியலை நோக்கி !
அவசர சிகிசை பிரிவில் ஒரு மரணம் ---
அதே விடியலை நோக்கி !
முக்கடலில் சந்திரன் விடை பெற ---
சூரியன் அங்கே விடியலை நோக்கி !
மலை முகடுகளில் ஓடி வரும் ----
நீர் துளிகள் விடியலை நோக்கி !
இனிய இசை கொண்டு பறவைகள்---
கானம் பாடி விடியலை நோக்கி !
வயல் வெளியில் ஏர் பிடித்து ----
உழவன் மகசூலுக்கு விடியலை நோக்கி !
இன்னும் உலகின் ஒவ்வொரு அசைவுகளும்
அந்த விடியலை நோக்கித்தான் !
விடியட்டும் நாளைய பொழுது
நமக்கு எல்லோருக்கும் இனிதாக !!
-ஸ்ரீவை.காதர் -