நல்வரவு 2015

இரு விகற்ப நேரிசை வெண்பா
---------------------------------------------

பல்வளம் வேண்டிடும் மானிட ருய்திட
நெல்நிலம் இல்லம் வசதியுடன் – நல்லொளி
மாதவம் பேறெனக் கூறிட வந்திடு
மேதகு வாங்கிலவாண் டே

பம்பரமாய்ச் சுற்றிநி தம்பலர் நொந்திட
மும்முரமா யீட்டும் பெரும்பணம் – நிம்மதிக்கு
சாதக மாகா தெனுமறி வூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே

மூத்தோர் மதியிற் சிறந்தோர்க் குநெல்பல
பூத்த நிலத்திலு ரிஞ்சிட - மீத்தேனைப்
பாதக மாமெனப் புத்தியி லூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Jan-15, 11:52 pm)
பார்வை : 1132

மேலே