எங்கு இருந்தோ வந்தவள்

யார் வந்து அழைத்தது
யார் வந்து அசைத்தது
யார் வந்து கெடுத்தது
என் மனதை

முகவரி இல்லா முன்னுரை கொண்டு
அதில் வந்தது இந்த பூ செண்டு
அழகிய சிவந்த இதழ் கொண்டு
வருகிறாள் வாசல் வரை

சிவப்பு சேலையில் அழகிய சோலையில்
ஒரு நீழல் ஆட கண்டேன்
தோகை இல்லா மயில் தனது
கூந்தல் விரித்து ஆட கண்டேன்

கனவிலும் வரவில்லை காட்சிகள் தரவில்லை
ஒரு நொடிகூட அவளை பார்க்கவிடவில்லை
இருந்தாலும் அவள் தருகிறாள் தொல்லை
இவளோ அழகின் எல்லை புரியவில்லை

என்ன செய்வேன் என்ன செய்வேன்
இவளை நேரில் பார்க்காமல்
காதல் செய்வேன் காதல் செய்வேன்
இவளை பார்க்கா விட்டாலும்

கண்ணாடியில் பின்பம் விழ பார்க்கிறேன்
என் முன்னாடி அவள் வர பார்க்கிறேன்
அவள் மறைந்தாளா நான் தொலைந்தேனா
தேடி தேடி தேய்கிறேன்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (3-Jan-15, 4:24 pm)
பார்வை : 183

மேலே