உழவனின் சமர்ப்பணம் - உதயா

**** என் தாயான பசுவிற்கும் , தந்தையான காளையருக்கும் உழவனின் சார்பாக இக்கவியை சமர்ப்பிக்கிறேன் *****
யாதும் அறியா
வயதிலிருந்து
தாயாக........
உதிரத்தை
பாலாக ஊட்டி
வளர்த்த
பசு அன்னையே !!!
என் தவம்
புரிந்தது
ஈடாக்க போவேனோ
உம் அன்பையும்
தியாகத்தையும்
யான் அறியேன் .....
தத்தி தவழும்
வயதில்
உறவாகவும் .....
யாம் வாழ்வில்
முன்னேற
உழு தொழிலில்
சிகரம் தொட
இரவு பகல்
பாராமல்
உம் தோல்
கொடுத்து உதவிய
நட்பே ...........
யாம்துவங்கும்
தொழில் யாதாயினும்
முழு திறனோடு
தந்தைக்கு நிகராக
துணைநின்று
உழப்பிட்ட
காளையரே ......
என் செய்து
தீர்ப்போனோ
உம் கடனை??
யான் யறியேன் ...
உழவனுக்கு
உயிகொடுத்த
உன்னத கடவுளாவீர்
நீவீர் ....
ஆண்டுதோறும்
நான்கு தினத்தை
கடவுளிடம்
கடன்பெற்று
அன்பை பூவாக்கி
மாலையாக
தொடுத்தும்
பாசத்தை
படையலாக்கி
உமக்கு விருந்தளித்து
மனமகிழ்ந்தேன் ...
காளையரே
நீவீரோ
எம்மை வீரமுள்ள
ஆடவனாக்க
வீரவிளையாட்டை
வரமாக கடவுளிடம்
முழக்கமிட்டு
வரமாக பெற்றுவிட்டாய் ....
நீவிர்
காற்றாய் கரைந்து
கல்லறைப்
புகும்வரை
எம்மை வாழ்வித்தீர்
யாம்
என்செய்து
உம் கடனை
தீர்போனோ
யான் யறியேன் ???
யானொரு
உழவனாக
உமக்கு
கடனாளி தான்
எத்துனை முறை
மண்ணில்
பிறப்பெடுப்பினும் ...........