கன்னியாகுமரி

கடற்கரை பக்கமாய்
காற்று வாங்க போனேன்..
கடலை விற்பவனும்
கவலை இல்லாமல் இருந்தான்...

மறுபுறம் திரும்பினேன்
மணலோடு விளையாடும்
மழலைகள் கூட்டம்
மனதை குளிர்வித்தது...

கால்கள் மீண்டும் நகர்ந்தது
காதல் ஜோடிகள்
கால நேரம் அறியாமல்
கவிதை பேசிக் கொண்டிருந்தார்கள்....

பொன்னிற அலையையும்
பொறுமையாய் ஏற்றுகொண்ட பாறையை
பொறாமையால் பார்த்து
பொங்கிப் போனேன்....

கூட்டம்
கூடிக் கொண்டே இருந்தது
படகு பயணம் நிறுத்தப் பட்ட போதும்....

கூட்டத்திலும் தனிமையாய் நின்று கொண்டிருந்தது,
தெய்வப் புலவர் சிலை...

எழுதியவர் : (4-Jan-15, 3:50 pm)
சேர்த்தது : மனோஜ் சுதர்சன்
Tanglish : kanniyakumari
பார்வை : 663

மேலே