• சாதி ஒழி மதம் அழி சாதி -பொங்கல் கவிதைப் போட்டி -2015

• சாதி ஒழி ! மதம் அழி! சாதி !


கல்விக்கொரு சாதிவேணும்
காசுக்கு சாதிவேண்டாம்
மருத்துவத்தில் சாதிவேணும்
மயிர்வெட்ட சாதிவேண்டாம்

உடம்புக்கு சாதிவேணும்
உறவுக்கு சாதிவேண்டாம்
குலம்காக்க சாதிவேணும்
குருதிக்கு சாதிவேண்டாம்

கொடுத்துதவ சாதிவேணும்
குழிவெட்ட சாதிவேண்டாம்..!
மானங்கெட்ட மனதுக்குள்ளே
மதம்கூட ரணம்போல..!

கடவுளென்று கட்டிப்போட்டு
காட்டுமிராண்டி யாக்கிடுவான்
காணிக்கை பேரைசொல்லி
கருமாதி பண்ணிடுவான்..!

சாமிபேரை சொல்லிசொல்லி
சபலத்தி லொருகூட்டம்..!
சந்துபொந்தா யுனைத்தேடும்
சந்திசிரிக்க வைக்கும்வரை..!

பற்றியெரியும் சாதிசமயம்
பைத்தியமா யாக்குமுன்னே
பகுத்தறிவை புரட்சியென
பரப்புவதும் சாதனைதான்..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (4-Jan-15, 8:58 pm)
பார்வை : 132

மேலே