என் அம்மா
உன்
முதல் முத்தத்தில் விழி திறந்து பார்த்தேன்
நீ அம்மனாகவே தெரிந்தாய்.................
அன்று அமைதியாக நீ
அகங்காரமாய் நான் ....................
இன்று கலங்கிய விழிகளோடு
அடுக்களையில் தன்னந்தனியாக
பாத்திரங்களோடு போராடும் ஆளாய் நான் .................
உன் போல அமைதியாக நான் இன்று .........
அகங்காரமாய் என் மகள் என்னை போலவே ...............
நீ எனக்காக உறங்காமல்
இருந்த காலங்கள் எத்தனை ...............
இன்று என் குழந்தையாக உன்னை
அரவணைத்து உன்னை உறங்க வைப்பேன் ........
அன்று அந்த நிலவை காட்டி "அதோ பார் நிலவு"
என்று எனது பசியாற்றினாய் ..............
வா அம்மா
அந்த நிலவே நீ தான் என்று
உனது பசியாற்றுகிறேன் உனக்கு இன்று .................
அன்றும் இன்றும் என்றும்
நான் காதலிப்பேன் உன் தாய்மையை அம்மா .....................