நிரந்தரம்
வாசல் தெளிக்க
வரும்
உன்னைக்
கண்டு..
பொறாமை பிடித்த நிலவு..
தினமும் ஓடி
மறைந்து கொள்கிறது..
நாணத்தில்
குறுகி..குறுகி..
பின்
ஒரு நாள்
வருவதே இல்லை..!
பின் தைரியம் வருவதும்
மறைவதும்
வாடிக்கையாகி விட்டது..
தேயவே மாட்டோம்
என்று பௌர்ணமி
அன்று..
கர்வம் வேறு!