பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்…

பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.

பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.

பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-15, 10:55 pm)
பார்வை : 149

மேலே