சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015

நட்டு வைத்த பயிரெல்லாம்
மழை வந்து மூழ்கிடவே!
குடியிருந்த கோபுரமும்
புயலடித்து சாய்ந்ததுவே!

அன்னை தந்தை, போன
திசையெங்கு தெரியாமல்
பக்கத்து ஊர் சென்ற
அக்காளும் வாராமல்
கண்ணீரும் கம்பளையாய்
குட்டித் தங்கயுடன் நின்றிருந்தேன்...

காசு, பணம்
புது துணிமனியும் வேண்டாம்,
ஒரு வேளை சோறு
இவளுக்கு மட்டும் போதும்...

காலடியில் போய் விழுந்தேன்
வேறு வழியேதும் தெரியாமல்...

வேறு சாதிக்காரனென்று
அவரது காலணிகள் முத்தமிட...

மானுடனைப் பிரித்து வைக்கும்
சாதிகள் வேண்டாமடி!
என் தங்கை பசியாற
வேளைக் கஞ்சி ஒன்று போதுமடி!

இது எமது கற்பனையே என உறுதியளிக்கிறேன்.

பா. சென்றாயப்பெருமாள்
81அ, நேரு நகர்,
வேளச்சேரி
சென்னை - 42
அழைப்பிலக்கம் - 9500670664

எழுதியவர் : பா. சென்றாயப்பெருமாள் (11-Jan-15, 1:30 am)
பார்வை : 79

மேலே