இன்னுமாடா ஞாபகம் வச்ருக்க

ஒரு நகர்புறத்தில் அழகான குடும்பம்
தந்தை ராஜேஷ் ,தாய் கவிதா ,மகன் சூர்யா ,மகள் செல்வி. அன்பு பொங்க வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பம்
தந்தையின் அலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது சூர்யாவின் பள்ளியில் இருந்து அவனது ஆசிரியர் பேசினார்
கவிதாவிடம் வந்த ராஜேஷ் உன் மகனால் என் மானமே போகுது அவன செல்லம் கொடுத்து கெடுக்குறதே நீ தான் என்று திட்டிய படி பள்ளிக்கு சென்றான் உங்கள் மகன் உடன் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான் என்றதும் கோவத்தின் உச்சத்திற்கே சென்றவராய் அவனை முறைத்து கொண்டிருக்க
ராஜேஷின் கண்களுக்கு முன்பாக அவன் எழுதிய கடிதத்தை நீட்டினார் அதை வாங்கி படித்தவர் ஆசிரியரிடம் மன்னித்து கொள்ளுங்கள் இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்கின்றன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் கவிதா என்னங்க என்ன பண்ணினான் என்று கேட்டதும் ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்று கதவை பூட்டி நாற்காலியில் அமர்ந்து எதோ யோசித்து கொண்டிருந்தான் பள்ளிமுடிந்து சூர்யா வீட்டுக்கு வந்தான் என்னடா பண்ண உங்கப்பா ரூம்குள்ள போனவரு வெளியவே வரல என்னடா பண்ண செல்வி ஓடி வந்து அம்மா அண்ணன் காதலிக்கிறானாம் அப்பாவ சார் திட்டினாங்க என்றதும் சூர்யா அழுக தொடங்கினான்
அம்மா ரெண்டு அடிய போட்டுவிட்டு ஏங்க ஏங்க கதவ திறங்க என்று கூப்பிட்டால் கதவு திறக்கவே இல்லை கவிதா பதறிப்போனால் கவிதா மீண்டும் மீண்டும் தட்டியும் திறக்கவில்லை பாவி இப்புடி கேவலபடுத்திட்டியே
உள்ள போன மனுஷன் கதவையே தொறக்க மற்றாரே என்று அழுக ஆரம்பித்தால் சூர்யா அதிர்ச்யின் உச்சிக்கே சென்றவனாய் அப்பா இனி இப்படி பண்ண மாட்டேன் வாங்கப்பா என்றன் செல்வியும் அழுக ஆரம்பித்தால்
சற்று நேரத்தில் ராஜேஷ் கதவை திறந்தான் ஏன் இப்படி கூப்பாடு போட்ற என்று திட்டினான் இந்த பைய இப்படி பண்ணிட்டனங்க என்று அழுதால் என்ன கொலையா பண்ணிட்டான் போ போய் டீ போடு என்றான் சூர்யா அப்பா இனி இப்படி செய்ய மாட்டேன்னு சொன்னான் சரி விடு நல்ல படி மற்றதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டு உனக்கு என்ன வேணும் செல்வி உனக்கு என்னம்மா வேணும்னு கேட்டு அப்பா வாங்கிட்டுவர்றேன்னு சொல்லிட்டு தன வாகனத்தில் ஏறி வழக்கமான டீ கடைக்கு சென்று தன் அலை பேசியை எடுத்து தன் பள்ளி நண்பன் கணேஷை அழைத்தான் மாப்ள இன்னைக்கு சூர்யா இப்டி பண்ணிட்டாண்டான்னு சொன்னான் கணேஷ் அவன இப்டி விட்றாத மாப்ள கண்டிச்சு வைன்னு சொன்னதும் அவன் லவ் பண்ற பொண்ணு பேரு என்ன தெரியுமான்னு கேட்டான் என்ன இருந்த என்ன அவனை கண்டிச்சு வைடா மாப்ள அந்த பொண்ணு பேரு சபிதா டா கணேஷ்கு புரியல பின்னர் தான் புரிந்த்தது!! சபிதா ராஜேஷ்
பள்ளி பருவத்தில் காதலித்த பெண் பெயர் சபிதா என்று மாப்ள இன்னுமாடா ஞாபகம் வச்ருக்க கணேஷ் சிரித்தான் ராஜேஷ் சொன்னான் மாப்ள தெயரியல ஆனா அந்த பேர பாத்ததுமே படிக்கும் போது அவளை பாத்தப்ப எப்புடி இருந்துதோ அப்படி ஒரு உணர்வுன்னு சொல்லி புன்னகைத்தான் ராஜேஷ் பழைய நினைவுகளில் இருந்து மீளாதவனாய் சென்றான் ராஜேஷ் பழைய நினைவுகளோடு.....

எழுதியவர் : தினேஷ் (19-Jan-15, 11:03 am)
சேர்த்தது : தினேஷ்
பார்வை : 428

மேலே