தம்பி சாலைகளே சாமியடா

கொண்டை ஊசி வளைவுகள்
சாலைப் பாதுகாப்பு விதியடா
கண்டு சென்றால் ஆப்பத்தில்லையடா
காணாமல் சென்றால் விபத்தடா
குண்டும் குழியும் சாலையின் கோலமடா
உண்டு உறங்கும் ஊராட்ச்சிக்கு சாட்சியடா
மெட்ரோ வரும் வரை பள்ளமும் பள்ளத்தாக்குமாடா
மெட்ரோ வந்து விட்டால் ஆனந்தமாடா இது அந்நிய தேசத்திற்கு நிகரடா
அணைகளே நம் ஆலயம் என்று நேரு பெருமான் சொன்னாரடா
தம்பி சாலைகளே சாமி என்று நாமும் சொல்வோமாடா !
-----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : நம்ம பழனி குமார் சார் முரளி சாரின் திருப்பதி திருப்பம்
கதையில ஒரு கருத்து சொல்லியிருந்தார் . அதில் விளைந்த பாடல்
பட்டுக் கோட்டையாரின் பாணியில்.

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-15, 10:08 am)
பார்வை : 110

மேலே