இறைவன் தந்த வரம்

..."" இறைவன் தந்த வரம் ""...

பிரியாத நினைவும்
துணையாக நிலவும்
இருக்கின்ற இரவில்
உறக்கங்கள் இல்லை
போராடி போராடி என்
விடிகின்ற பொழுது
விடைகாண கூடும் !!!

என்றே மனமும்
சமாதானம் செய்யும்
வருவாள் கனவில்
வாசல்தனை தேடி
வாடிய மனதினை
மலரவே செய்திட
என்றே நானும் !!!

தவித்திருந்த தினங்கள்
வசந்தத்தின் தென்றல்
வந்திடுமா நிசத்தில்
காத்து காத்து என்
கண்கள் இரண்டும்
பூத்து பூத்து ஏனோ
பூரணம் அடையவில்லை !!!

உள்ளன்பினை சுமந்து
ஆழிப்பேரலையாய் என்
ஏக்கங்கள் எழுந்தேநிற்க
வந்தாளொரு தேவதை
சேதாரப்பட்ட இதயத்தில்
முழுமை ஆதாரமாய் !!!

முடிந்துவிட்ட பந்தத்தில்
தன் மூச்சினை கலந்து
முந்தானை விரித்து
தன்னை தந்தே அதிலவள்
என்னை உள்வாங்கியே
பிம்பம் ஒன்றை எனக்கு
அன்பின் பரிசாகத்தந்தாள் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (21-Jan-15, 11:20 am)
பார்வை : 244

மேலே