என்னைப்பாருங்கள்

வெண்திரை ஒன்றை
விரித்து வையுங்கள்!!
உங்கள் கட்டிலறை
சுவரில்!!
முழு இரவையும்
குத்திக்கிழிக்க_ஓர்
மெழுகுதிரியையும்
ஏற்றிக்கொள்ளுங்கள்!!
மின்சார
தீபங்களை
மறக்காமல்
அணைத்துவிடுங்கள்!
இதோ நான்
எதிர்பார்த்த
இருள் இதுதான்
வாருங்கள்!!
நீங்கள்
விரித்துவைத்த
வெண்திரையில்
நான் என்னை
காட்டப்போகிறேன்!!
நான் ஒன்றும்
வித்தைக்காரன்
அல்ல!!_எவளோ
ஒருத்தியின்
காதலன்!!
சில கணங்கள்
நீங்கள் ஏற்றிய
மெழுகுதிரியை
கண்வெட்டாமல்
பார்த்துவிட்டு!!
என் காதலையும்
கண்களையும்
ஏன் மொத்தத்தில்
என்னையும்
திரையில் நீங்களே
பார்த்துக்கொள்ளுங்கள்!!
நான்
போய்வருகிறேன்
காதலியொருத்தி
காத்திருக்கிறாள்
என் கனவில்!!