குருதியில் மலர்ந்த கல்லறை பூக்கள் - உதயா

இதயங்கள் இடமாறி
உள்ளங்கள் பரிமாறி
மனங்களில் விதையாகும்
அமர உணர்வு காதல் ............
பணங்களை பார்ப்பதில்லை
சாதியை பார்ப்பதில்லை
உருவத்தை பார்ப்பதில்லை
அன்பை மட்டுமே பார்க்கும்
பாரமிர்தம் காதல் ............
விரலோடு விரல்கள் பிணைந்து
மண்ணோடு கால்கள் இணைந்து
ஒருவர் கனவில் ஒருவர் புகுந்து
சாதாரண மனிதனையும் கம்பனைப்போல்
கவிஞ்சனாகும் காதல் ........
ஏற்றத்தை தீபமாக
வாழ்வில் ஏற்றி
ஏக்கங்களை தணிக்கும்
வாழ்க்கை காதல் ..........
ஏனோ ?
காரணத்தை கண்டெடுத்து
நஞ்சினை சொல்லில் வைத்து
காதலர்களை பிரித்துவிடுகின்றனர்
உறவினர்கள் ....
தமக்கு காலனைப்போல்
சொல் தொடுக்கும்
பாவையை தான்பார்த்தே
மகனுக்கு மணம்தொடுக்கும்
பெற்றவர்கள்
தம்மை பெற்றவர்களாய்
பாவித்து உபசரிக்க
நினைக்கும் மகனின்
காதல் மங்கையை
ஏன் வெறுக்கின்றனரோ
உணவை உண்ணும் போது
இதை யார்
உண்டு செய்தாரோயென
சாதியை பார்ப்பதில்லை
ஆடையை அணியும் போது
இது யார் உழைப்பில்
உருவானதோயென
மதத்தை பார்ப்பதில்லை
வசிக்கும் மண்ணும்
சுவாசிக்கும் காற்றும்
சாதி பார்த்துக்கிடைப்பதில்லை
பாரெங்கும் பொழியும்
மழை கூட
மதம் பார்த்து
பொழிவதில்லை
வாழுகின்ற சிலகாலத்திலும்
ஏன் சாதி மதமென
அலைகிறார்களோயென
புரியவில்லை.......
காதலர்கள்
உணர்வுகளை பெற்றவர்களுக்கு
உணர்த்த முற்பட்டும்
ஏனோ
அவர்களின் உள்ளம்
செவிமடுக்கவில்லை
மனமெனும் பூவனத்தில்
இணைந்தே பிறந்த
பூக்களான காதலர்கள்
உதிர மனமின்றி
மண்ணெனும் வனத்தில்
குருதி பூக்களாய்
மலர்ந்து
கல்லறை வனத்திற்கு
இடம்பெயர்ந்து இணைந்தே
வாழ்கின்றனர் .........
பிரியாத மனங்களாக ........