உன்னைவிட, உயிரும் உசத்தியில்லை

இதயம் நிறைந்த காதல் - தந்ததோ,
இவள் உயிரில் முறையாய் சாதல்!..
இன்னும் எதை நீ எதிர்பார்க்கிறாய்,
தருவதற்கோ என்னிடம்
இல்லை எதுவும் மீதி...

காதல் என்ற வார்த்தைக்குள்
அன்பின் வீதம் நூரென்றால்,..
கொடுத்துவிட்டேன் உனக்காய்
அதையும் தாண்டியதோர் அன்பை!

காதல் என்ற சொல்லோடு
கண்ணீரின் வீதம் நூரென்றால்,..
அதையும் மீறி அழுதுவிட்டேன்
தனிமையிலே நான் உனக்காய்!

இன்னும் எதை தான் கேட்கிறாய் என் அன்பே....

ஊரை கூட்டிச் சொல்லட்டுமா,
எனக்கும் உனக்குமான உறவை...
தயக்கம் என்னிடம் இல்லை,
தலைவனே உன்னிடம் மட்டுமே!

இன்னும் எதை தான் கேட்கிறாய் என்னவனே...

நான் உ(ன்)னை நேசிப்பது தவறென்றால்,
சொல்லிவிடு அதை நீயும் வாய் திறந்து...
தினம் தினம் சாவதற்கு பதிலாய்,
கொடுத்துவிட்டுப் போகிறேன் - என்
உயிரை தவறுக்கு பிராயச்சித்தமாய்!..

உ(ன்)னைவிட, உயிரும் உசத்தியில்லை!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (25-Jan-15, 7:37 pm)
பார்வை : 190

மேலே