+விடுமுறை நாளின் குறிப்புகள்+
சூரியன் விழித்தபின்
வெகு நேரம் சென்றே
விழிப்பு வரும்!
உறக்கம் கலைந்தாளும்
கொட்டாவியுடனான உறவு
நாள் முழுவதும்
தொடரும்!
தொலைக்காட்சி பெட்டி மட்டுமே
நாள் முழுவதும் ஓடும்
கையும் காலும்
ஓய்வை மட்டுமே
நாடும்!
மாலை நேரம் நெருங்க நெருங்க
நாளையின் நினைவு வந்து
இன்றைய பொழுதின் மகிழ்வை
முழுதாக எடுத்துச்
செல்லும்!