ஏமாற்றம்

மூடி வைத்த என் இதயத்தை
புத்தகமாய் திறந்து படித்த
முதல் பெண் நீ தான் .......
மறைத்து வைத்தேன் மலர்
போன்ற பகுதியை அதை
எடுத்து மணம் வீச வைத்த
முதல் பெண் நீ தான் .........
மணம் வீசிய இந்த மலரை
மயானக் குழியில் புதைத்த
முதல் பெண்ணும் நீ தானே .....