நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

நெஞ்சு பொறுக்குதில்லையே

கருவறையில் இடம் தந்தவளுக்கு
வீதியோரம் இடம் தந்த
கல்மனம் படைத்த கயவனை நினைத்து ...

பாலுக்கு அழும் பிள்ளை கதறி துடிக்கும்போது
புற்றுக்கும் சிலைக்கும் நடிகர்களும்
பாலுற்றும் மேதைகளை நினைத்து ...

இயற்கை பெண்மைக்கு வழங்கிய கொடையை
மூன்றுநாட்கள் தொழு நோயாளியாய் ஒதுக்கிவைத்து
வீடறிய செய்யும் மூடர்களை நினைத்து ...

ஓராயிரம் விலைமாது ஊருக்குள் இருக்க
ஒன்றுமறிய சிறுகுழந்தையை பலாத்காரம் செய்யும்
மானம்கெட்ட நாயை நினைத்து...

மாதா, பிதா, குரு, தெய்வம்
பெற்றோருக்கு அடுத்து தெய்வத்திற்கு முன்னிற்கும் குருவே
சில இடங்களில் காம கயவனாக மாறும்போது...

முகத்திற்கு முன் புகழ்ந்து பேசி
முகத்திற்கு பின் சாக்கடை பூசும் போலியாக
உறவாடி கெடுக்கும் போலி ஆசாமிகளை நினைக்கும்போது....

நெஞ்சு பொறுக்குதில்லையே , என்
நெஞ்சு பொறுக்குதில்லையே

எழுதியவர் : Subha (3-Feb-15, 5:41 pm)
பார்வை : 146

மேலே