கணக்கு

பிறந்த தேதியை
நான் எழுதவில்லை
இறந்த தேதியையும்
என்னால் எழுத
முடியவில்லை..
யாரோ
எழுதினார்கள்
இரண்டையும்..
ஒன்றில்
ஒன்று
போக..
மீதம்..
ஒன்றும் இல்லை..
சரிதானே இது !

எழுதியவர் : கருணா (5-Feb-15, 10:39 pm)
Tanglish : kanakku
பார்வை : 131

மேலே