காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 4

காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 4

வேற்று கிரகத்திலிருந்து ஒரு பறவை
பூமியில் அருகே பறந்து வந்தது
ஒரு இறகை மறந்தும் சென்றது!


நியூட்டனின் விதிப்படி
பூமியில் நுழைந்தது
புது உலகில் வந்து விட்ட
பூரிப்பில் இருக்கையில்
திடீரென அழுதது
காரணம் உடல் வெந்தது
ஆம் புறா ஊதா கதிாின் தாக்கம்
பூமியில் நுழையும் போதே
இவ்விதம் நொந்தது!


ஒரு வித அச்சத்தோடு
மெல்ல மெல்ல பூமியில் இறங்கியது
இறங்கிய இடம் சாக்கடை
தெருவெங்கும் பத்து கட்சிகள்
மக்களையே சாப்பிடும் மாமிச பட்சிகள்!


மனம் குமுறிக்கொண்டே
அடுத்த இடம் நகா்ந்தது
அது ஒரும் விலை பேசும்
சந்தைக்கூடம்
நடந்தது பொிய பேரம்
காரணம் பெற தாரம்
பெண்ணை பெற்றதுக்கோ
பொிய பாரம்
மனிதனின் மனமோ காரம்
பாா்க்க மனமில்லாமல்
தூரமாய் நகா்ந்தது ஓரம் !


அங்கே சாதி பெயா் சொல்லி
பேதியை போல்
அசிங்கமாக சண்டையிட்டு கொண்டிருந்தன சில கூட்டம்
தேவையற்றவற்றை மனதில் தினித்ததால்!


இவைகளெல்லாம்
மனதை அழுத்திக்கொண்டிருக்கையில்
மேகம் அழுதது
இதுவும் மண்ணில் புதைந்தது!


அடுத்த கணம்
ஏதோ ஒன்று இதன் கழுத்தில் தூக்கை மாட்டியது
மற்றொன்றோ வாயில் நஞ்சை ஊட்டியது
ஆம் நெகிழிப்பையும் செயற்கை உரமும் தான்!


மூன்று இடங்களிலும் வாழ முடியாத
பூமியின் அவலத்தை நினைத்தது
அதன் கிரகமே சிறந்தது
என மனம் கனைத்தது !
--------------------------------------------------------------------------

இந்த தலைப்பு சகோதரா் ஜின்னா அவா்களின் உந்துதலின் போில் எழுதப்பட்டது ...

எழுதியவர் : சபியுல்லாஹ் (8-Feb-15, 1:47 pm)
பார்வை : 131

மேலே