என்னோடு பேட்டி

உங்களுக்கு
என்ன பிடிக்கும்
..யாரைப் பிடிக்கும்..
எதனால் பிடிக்கும்..?
பேட்டி எடுப்பவள்
கேட்கிறாள்..என்னை..
நினைவுகள் என்னை தொடர்ந்தன..
என் நிழல்கள் தானே அவை..
நெட்டையும் ..குட்டையுமாய்..
துரத்த வழியில்லை..
எனக்குப் பிடித்ததெல்லாம்
எல்லோருக்கும் பிடிக்க
நான் சொல்வதை எல்லாம் நம்ப
நான் என்ன..
அம்பானியா..
இல்லை..
அனுஷ்கா ..
ஹன்சிகாவா.?
இல்லை தலையா..?
வாலா?
கேஜிரிவாலா?
கேசரியா..
சீ.சீ..என்ன இது..?
உளறுகிறேனோ..!
என் நிழல்களை
கையெடுத்து கும்பிட்டேன்..
கொஞ்சம் விலகி இருங்கள்..
ஓய்வெடுக்க வேண்டும்..
நான்..
சொல்வதை இவர்கள்
நம்ப வைக்க வேண்டும்..
உண்மைகள் மறைக்க வேண்டும்..
அப்படியென்றால்..
இருளுக்குள் போ..
என்றன நினைவுகள்..
என் நிழல்கள்..!..
போனேன்..!
பேட்டி ..
சிறப்பாக அமைந்தது..
(COFFEE BREAK!)