என் செவிகள் மேல் எனக்கு நம்பிக்கை போய் விட்டது போலும்

என் செவிகள் மேல் எனக்கு
நம்பிக்கை போய் விட்டது போலும்!
அலைபேசி அருகில் இருந்தும்
என் கவனம் முழுவதும்
அதன் மேல் இருந்தும்
அடிக்கடி சோதனை செய்து பார்க்கிறேன்!
வரவே வராது என்று தெரிந்தும்
உன் அழைப்பு பதிவை!