காவியம் எழுதிடு
கவலைகளை காகிதத்தில் எழுதிவிடு
காகிதகப்பலாய் கடலினில் மிதக்கவிடு
கருங்கடல் பசியை ஆற்றிவிடு
கண்ணீர் துளியை மழையாக்கிடு
களர்நில விதையை செடியாக்கிடு
பூக்கள் அங்கே புன்னகைக்கும்
காற்றினில் வாசம் கதைகேட்கும்
மௌனங்கள் பேசும் பலவிதம்
பண்புகள் சீர்தூக்கும் நல்மதம்
தேர்ந்தெடு உனக்கென்று ஓர்பதம்
சிகரங்கள் பின்வரும் உன்னோடும்
தோல்வியே உன்தோழன் நம்பிடு
தவறுகள் அறிந்து களைந்திடு
தேவைகள் தேடி அலைந்திடு
சேர்ந்துவரும் வெற்றி உன்னோடு
கடந்துசெல்லும் காலம் நிற்காமல்
உனக்கென்று கடத்திடு ஓர்காலத்தை
காவியம் உரைத்திடும் உன்புகழை
கலைசேர்த்து படைத்திடு உன்பெயரால்.......