போதைக்கவிதை

என்னை மறக்க‌
எண்ணி இந்த‌
இராத்திரியில்
போதையில்
கவிகள் புனைந்த
பொழுதுதில்!!

உயர் ரக‌
திராட்சை ரசத்தை
ஊற்றிவைத்த‌
மதுக்கிண்ணத்தில்
வீழ்ந்து! எழுந்து
தள்ளாடுகிறது
ஓர் கவிதை!!

அதற்க்கு
பின்னாலும்
அணிவகுப்பில்
சில கவிதைகள்!

இருப்பினும் என்
மதுக்குடுவைகள்
காற்றை மட்டுமே
நிரப்பி வைத்துள்ளன!!

அதோ அந்த‌
கவிதை இன்னும்
சிறிது தூரத்தில்
தன்னை
மறக்கக்கூடும்!!

மின்மினிகளே
துணைக்கு
செல்லுங்கள்!!
அந்த கவிதை
முழுதும் என் காதல்
நுகரப்பட்டுள்ளது!!

அதற்க்கும் மேலாய்
என் கண்ணீர்
படர்கிறது அதில்!!
மின்மினிகளே
துணையாய்
செல்லுங்கள்!

என்ன நேர்ந்தது
அந்த கவிதைக்கு
பற்றி எரிகிறதே!
மின்மினிகள்
கொழுத்திவிட்டனவா!!

இதோ இதோ
மற்றைய
கவிதைகளும்
அதில் வீழ்ந்து
இறந்து போகின்றனவே!
என்ன செய்வது?!

எதிர்த்திசையில்
ஓர் கவிதை
மட்டும் அதிக‌
தள்ளாட்டத்துடன்
தனித்து நடந்து
போகிறதே!!

ஓ அந்த
கவிதையில்தானே
என் காதலியின்
அழகை
வர்ணித்திருந்தேன்!!

அதை
பிடித்தாகவேண்டும்
எரியும் கவிகள்
எரியட்டும் வாருங்கள்
அதன் பின் செல்வோம்!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (13-Feb-15, 11:20 pm)
பார்வை : 123

மேலே